×

தமிழ்நாட்டில் நாளை முதல் 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நாளை(22.06.2023) முதல் 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின் போது 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அறிவித்திருந்தார்.

மேற்படி, அறிவிப்பின்படி , 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளைக் கண்டறிந்து மூடிட 20.04.2023 அன்று அரசாணை எண்.140, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வெளியிட்டது.

அந்த அரசாணையை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 500 கடைகளை கண்டறிந்து அவற்றை 22.6.2023 அன்று முதல் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மேற்குறிப்பிட்ட 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் 22.6.2023 முதல் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் நாளை முதல் 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Tamil Nadu Government ,Chennai ,liquor retail stores ,Dinakaran ,
× RELATED காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க...